எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க பாரதீய ஜனதா சூழ்ச்சி நாராயணசாமி குற்றச்சாட்டு
சந்தையில் மாடுகளை விலைபேசுவதை போல எம்.எல்.ஏ.க்களை விலைபேசி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க பாரதீய ஜனதா கட்சி சூழ்ச்சியில் ஈடுபடுவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பாரதீய ஜனதா கட்சியை கண்டித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது.
இந்த ஊர்வலம் புதுவை அண்ணா சிலை அருகே தொடங்கியது. புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அரசு கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, விஜயவேணி, புதுவை அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
இந்த ஊர்வலம் அண்ணாசாலையில் தொடங்கி நேருவீதி வழியாக புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தை சென்றடைந்தது. அங்கு தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியை பாரதீய ஜனதா அழிக்க நினைக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அருணாசலபிரதேசத்தில் 56 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா ஆட்சி அமைத்தது. அதேபோல் உத்திரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் பேசி ஆட்சியை கவிழ்க்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் ஆட்சியை கலைத்தார்கள். அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.
மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அறுதி பெரும்பான்மை இருந்தது. காங்கிரஸ் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி மாற்றத்தை உருவாக்கினார்கள். கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை, சுயேட்சைகளை இழுத்து ஆட்சியை அமைத்துள்ளனர்.
இப்பொழுது கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைந்து 1½ வருடம் தான் ஆகிறது. அதனை பா.ஜனதாவால் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆட்சியை கவிழ்க்க சதிதிட்டம் தீட்டினார்கள். அதற்காக எடியூரப்பா குதிரை பேரம் பேசினார். அது நிறைவேறாத காரணத்தால் திட்டம் கைவிடப்பட்டது.
தற்போது மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தனது விஸ்வரூபத்தை காட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கி மும்பையில் நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்துள்ளனர்.
பா.ஜனதா கட்சியினர் குதிரை பேரத்திற்கு மடியாத சட்டமன்ற உறுப்பினர்களை வருமானவரி, அமலாக்கப்பிரிவு, உளவுத்துறை, சி.பி.ஐ. போன்றவற்றை ஏவிவிட்டு அசிங்கப்படுத்தி வருகிறார்கள். சந்தையில் மாடுகளை விலைபேசுவதை போல எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா சூழ்ச்சி செய்து குதிரை பேரம் பேசி வருகிறார்கள்.
கோவாவில் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்கள் 17 பேர் உள்ளனர். அதில் 10 பேரை விலைக்கு வாங்கி 3 பேருக்கு மந்திரி பதவி தருவதாக ஆசை வார்த்தை காட்டி கட்சியை உடைத்து பா.ஜனதா தனது சித்து வேலையை காண்பித்து வருகிறது.
பிரதமர் நரேந்திரமோடி காங்கிரஸ் கட்சியை நாட்டில் இல்லாமல் ஆக்கிவிடுவதாக கூறியுள்ளார். அது அவராலும் முடியாது, அவருடைய தந்தையாலும் முடியாது. காங்கிரஸ் கட்சி பாரம்பரிய கட்சி, தியாகம் செய்த கட்சி. காங்கிரஸ் கட்சியை யாரும் அசைத்து பார்க்க முடியாது. அனைவருக்கும் ஏற்றத்தாழ்வு இருக்கும், வெற்றி தோல்வி இருக்கும். இப்பொழுது தோல்வியடைந்தாலும் மீண்டும் வெற்றி பெறுவோம். உச்சத்தில் இருப்பவர் கீழே வந்தாக வேண்டும். அதிகார போதை ஏறி மோடி மற்றும் பா.ஜனதாவினர் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.