தானேயில் காணாமல் போன 2 சிறுவர்கள் கழிமுக கால்வாயில் பிணமாக மீட்பு போலீஸ் விசாரணை

தானேயில் காணாமல் போன 2 சிறுவர்கள் கழிமுக கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-07-14 22:56 GMT
மும்பை, 

தானேயில் காணாமல் போன 2 சிறுவர்கள் கழிமுக கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவர்கள் மாயம்

தானே கோப்ரி சுபாஷ் நகர் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சுபம் வினோத் தேவ்கர் (வயது15), பிரவின் சத்யாம் கஞ்சாரி (15). இந்த சிறுவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திடீரென காணாமல் போனார்கள்.

இதனால் கலக்கம் அடைந்த சிறுவர்களின் பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடி அலைந்தனர். ஆனால் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்களை தேடி வந்தனர்.

பிணமாக மீட்பு

இந்த நிலையில், நேற்று முன்தினம் கோப்ரி பகுதியில் உள்ள கழிமுக கால்வாயில் சிறுவர்கள் 2 சிறுவர்கள் பிணமாக மிதந்து கொண்டு இருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று சிறுவர்களின் உடல்களை மீட்டனர்.

விசாரணையில் பிணமாக மீட்கப்பட்ட சிறுவர்கள் இருவரும் காணாமல் போனதாக புகார் கொடுக்கப்பட்ட சுபம் வினோத் தேவ்கர், பிரவின் சத்யாம் கஞ்சாரி என்பது தெரியவந்தது.

இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. போலீசார் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்