மும்பை ஓட்டலில் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள்: ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கிறது பா.ஜனதா அசோக் சவான் கண்டனம்

ஜனநாயகத்தின் கழுத்தை பா.ஜனதா நெரிக்கிறது என காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-07-10 22:30 GMT
மும்பை,

ஜனநாயகத்தின் கழுத்தை பா.ஜனதா நெரிக்கிறது என காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

கர்நாடக மந்திரி விவகாரம்

மும்பை பவாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க வந்த அந்த மாநில காங்கிரஸ் மந்திரி டி.கே.சிவக்குமார் மும்பை போலீசாரால் வேனில் ஏற்றிச்செல்லப்பட்டார். அவருடன் இருந்த மிலிந்த் தியோரா, சஞ்சய் நிருபம், ஆரிப் நசீம்கான் உள்ளிட்ட மும்பை காங்கிரஸ் தலைவர்களையும் போலீசார் பிடித்து சென்றனர்.

இந்த சம்பவத்துக்கு மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கிறது

இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘கர்நாடக காங்கிரஸ் - ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சிகளை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஊக்கப்படுத்தி கொண்டு இருக்கிறார். மும்பை போலீசாரின் கண்காணிப்பில் கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சிறைபிடித்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பா.ஜனதாவினர் ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு முன் கோவா மற்றும் மணிப்பூரில் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியது’’ என்றார்.

மேலும் செய்திகள்