வானவில் : நான்கு விதமான துருவலுக்கு...
சமையலறையில் நவீன கருவிகள் எவ்வளவுக்கு எவ்வளவு பயன்படுத்தப்படுகிறதோ அந்த அளவுக்கு சமையல் வித்தியாசமானதாகவும், சுவையாகவும் இருக்கும்.
இப்போதெல்லாம் வீட்டில் உள்ள குழந்தைகள் ஓட்டலில் தருவதைப் போல அலங்காரம் செய்யப்பட்ட உணவுப் பொருள்களை விரும்பி சாப்பிடுகின்றனர்.
அதற்கேற்ப இல்லத்தரசிகளும் புதிது புதிதாக சமைக்க வேண்டியிருக்கிறது. காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு சிறந்தது. ஆனால் அதை குழந்தைகள் கேட்பதில்லை. அதேசமயம், அதை துருவலாக, வித விதமான வடிவில் அளிக்கும்போது குழந்தைகளுக்கும் அதன் மீது ஆர்வம் பிறக்கும்.
தாங்களாகவே முன்வந்து சாப்பிடுவர். அந்த வகையில் நான்கு வகையான துருவல் அதாவது காய்கறிகள் மட்டுமின்றி முந்திரி, பாதாம் போன்ற பயறு வகைகளையும் அழகாக துருவி உணவுப் பொருளின் மீது தூவி அளிக்கலாம். அதற்காக வந்துள்ளதுதான் ‘41 கிரேட்டர்’. இதில் உங்களுக்கு விருப்பமான டிரம்களை மாற்றி அருகில் உள்ள கைப்பிடியில் சுற்றினால் விதவிதமான துருவல்கள் கிடைக்கும். இதன் விலை ரூ.495.