கடல் சாகச பயணம் மூலம் ராணுவ பயிற்சி கிடைக்கிறது - அமைச்சர் கமலக்கண்ணன் தகவல்
கடல் சாகச பயணம் மூலம் ராணுவத்தின் ஒரு பகுதி பயிற்சி மாணவர்களுக்கு கிடைப்பதாக அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.
புதுச்சேரி,
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் இயக்ககத்தின் கீழ் உள்ள புதுவை என்.சி.சி. குழுமம் சார்பில் மாணவ, மாணவிகள் சமுத்திரகமி என்ற பெயரில் கடல் சாகச பயணத்தை மேற்கொள்கின்றனர். இதன் தொடக்க நிகழ்ச்சி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று நடந்தது.
இந்த கடல் சாகச பயணத்தை அமைச்சர் கமலக்கண்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., கப்பற்படை அதிகாரி கமாண்டர் தினகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:-
புதுச்சேரி என்.சி.சி. மாணவர்கள் தேசிய அளவில் 4 விருதுகளை பெற்றுள்ளனர். கடல் சாகச பயணம் சமூகத்திற்கு மிகவும் பயன்படும். இந்திய மக்களாகிய நாம் பல நிலைகளில் கடலை சார்ந்து வாழ்கிறோம்.
கடலைப்பற்றி புரிந்துகொண்டு செயல்படவும், பழகுவதற்கும், கடலின் தூய்மையை கடைபிடிக்கவும் இந்த சாகச பயணம் நமக்கு உதவும். இதன் மூலம் ராணுவ பயிற்சியின் ஒரு பகுதி மாணவர்களுக்கும் கிடைக்கும். மேலும் தேசபக்தி, சமூக பொறுப்பு, மற்றும் உடலுக்கு வலுவும் கிடைக்கும்.
இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் பேசினார்.
இந்த கடல் சாகச பயணத்தில் 25 மாணவிகள் உள்பட 60 பேர் கலந்துகொள்கின்றனர். காரைக்கால் வரை பாய்மர படகில் செல்லும் மாணவ, மாணவிகள் வருகிற 19-ந்தேதி மீண்டும் புதுச்சேரி திரும்புகின்றனர்.