கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-07-09 23:15 GMT
காரைக்குடி,

காரைக்குடி அருகே மானகிரி அரசு போக்குவரத்து கழகம் முன்பு தமிழ்நாடு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியர்களின் ஓய்வு கால பணப்பலன்களை ஓய்வு பெறும் நாள் அன்று வழங்க வேண்டும்.

போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் 45மாத அகவிலைப்படியை கணக்கிட்டு நிலுவையுடன் வழங்க வேண்டும், மருத்துவ காரணங்களால் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.

மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஓய்வு பெற்றோர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அதன் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் பவுல்ராஜ் மற்றும் பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சின்னச்சாமி சிறப்புரையாற்றினார். இதில் லோகநாதன், மாணிக்கம், மணிக்கண்ணு, ஞானசேகர், என்.மாணிக்கம், கேசவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்