இளையான்குடி பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகும் அவலம்
இளையான்குடி பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருவது தொடர் கதையாகி வருகிறது. இதை நிரந்தரமாக சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளையான்குடி,
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிதண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு தற்போது இந்த மாவட்ட மக்களுக்கு குடிதண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இளையான்குடி பகுதியில் இந்த காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்தோ, அல்லது சில இடங்களில் குழாய்களை உடைத்து அந்த பகுதியில் குடிதண்ணீர் பல மாதங்களாக வீணாகி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
இதனால் தற்போது உள்ள இந்த வறட்சியான நிலையில் இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் கடும் சிரமம் உள்ளது. பொதுவாக இளையான்குடி பகுதி மக்களுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறைதான் காவிரி கூட்டுக் குடிநீர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு ஆங்காங்கே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருவதால் இப்பகுதி மக்கள் ஒரு குடம் தண்ணீர் ரூ.20-க்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் சமீபகாலமாக இளையான்குடி பகுதியில் சில மர்ம நபர்கள் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களை உடைத்து நூதன முறையில் தண்ணீரை திருடி அவற்றை சில இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இன்னும் சிலர் கட்டிட வேலைகள் மற்றும் விவசாயத்திற்கு இந்த தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த பல மாதங்களாக இளையான்குடி அருகே உள்ள கல்லூரணி கிராமத்தில், இந்த காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி அருகில் உள்ள வாய்க்கால் வழியாக சென்று ஊருணி போல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த கிராமத்தை சுற்றியுள்ள அரணையூர், கருஞ்சுத்தி, கரும்புக்கூட்டம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிதண்ணீர் வினியோகம் செய்யமுடியாமல் உள்ளது.
இதேபோல் மல்லிப்பட்டிணம் மாணிக்கவாசகநகர் சுடுகாடு பகுதியில் இந்த தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்பதால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இவ்வாறு அந்த பகுதியில் பல மாதங்களாக குடிநீர் தேங்கி நிற்பதால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.