வேலூர் தொகுதி வேட்பாளர்கள் ‘கள்’ தடைசெய்யப்பட்ட பொருள் என நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு; செ.நல்லசாமி அறிவிப்பு
வேலூர் தொகுதி வேட்பாளர்கள் ‘கள்’ தடை செய்யப்பட்ட பொருள் என்று நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்று செ.நல்லசாமி அறிவித்துள்ளார்.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் விடுதி ஒன்றில் கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் செ.நல்லசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த வேட்பாளர்களில் யாராவது கள் தடை செய்யப்பட்ட பொருள் என்று நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும். இல்லை என்று கூறினால் அவரின் வெற்றிக்கு பாடுபடுகிறோம்.
கர்நாடகா காவிரியில் தமிழ்நாட்டுக்கு விடவேண்டிய தண்ணீரை தேக்கி வைத்துள்ளது. கடந்த ஆண்டு பெரும் மழை பெய்தது. அப்போது கர்நாடகா தங்களுடைய அணைகளின் நலனை கருதி உபரி நீர் முழுவதையும் திறந்துவிட்டது. அந்த தண்ணீர் 3 நாட்களில் மேட்டூர் வந்து அணையை நிரப்பியது. அப்போது சுமார் 170 டி.எம்.சி. தண்ணீர் எந்த பயனும் இல்லாமல் கடலில் கலந்தது.
கர்நாடகம் காவிரி நீரை நாள்தோறும் பங்கிட்டு தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை திறந்துவிடவேண்டும். பவானிசாகர் அணை நீர் சட்டத்துக்கு புறம்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது விவசாயிகளுக்கு பேரிழப்பாகும். சென்னை மட்டுமல்ல சேலம் போன்ற நகரங்களிலும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.