கொரடாச்சேரி அருகே சொத்து பிரச்சினையில் விவசாயி மீது தாக்குதல் அண்ணன்-தம்பி கைது

கொரடாச்சேரி அருகே சொத்து பிரச்சினையில் விவசாயியை தாக்கி அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-09 22:15 GMT
கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள களத்தூரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 61). விவசாயி. இவருக்கும், இவருடைய தம்பி திருநாவுக்கரசுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை களத்தூரில் நடைபெற்றுள்ளது. ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது திருநாவுக்கரசின் மகன்கள் முருகானந்தம் (35), கண்ணன் (32) ஆகிய இருவரும் அங்கு வந்தனர்.

தாக்குதல்

அப்போது முருகானந்தமும், கண்ணனும் சேர்ந்துகொண்டு உனக்கு ஏது சொத்து என கேட்டு நடராஜனை தாக்கினர். இதில் காயமடைந்த நடராஜன் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன்-தம்பியான முருகானந்தம், கண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

மேலும் செய்திகள்