ரூ.23½ கோடி திட்ட மதிப்பீட்டில் திருச்சி மாநகரை ஒளிரச்செய்யும் 9 ஆயிரம் எல்.இ.டி. விளக்குகள்
ரூ.23½ கோடியில் அமைக்கப்பட்டு வரும் 9 ஆயிரத்து 80 எல்.இ.டி.மின் விளக்கு கள் திருச்சி மாநகரை ஒளிரச்செய்து வருகிறது.
திருச்சி,
அதிகப்படியான மின் பயன்பாட்டை குறைத்து மின் சேமிப்பை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மின் சேமிப்பை தரக்கூடிய சி.எப்.எல்., எல்.இ.டி. வகை மின்சார பல்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள 65 வார்டுகளிலும் 37 ஆயிரத்து 398 மின் விளக்குகள் இருந்தன. டியூப் விளக்குகள், மஞ்சள் நிறத்தில் எரியக்கூடிய சோடியம் வேப்பர் மின் விளக்குகளான இவற்றை படிப்படியாக எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன.
இவற்றில் 29 ஆயிரத்து 134 மின் விளக்குகள் ஏற்கனவே எல்.இ.டி. மின் விளக்குகளாக மாற்றம் செய்யப்பட்டு விட்டன. மீதம் உள்ள 8 ஆயிரத்து 264 விளக்குகளை எல்.இ.டி. மின் விளக்குகளாக மாற்றும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதுதவிர ஸ்மார்ட் சிட்டி பகுதியில் 494, ஸ்மார்ட் சிட்டி அல்லாத பகுதியில் 322 என 816 எல்.இ.டி. மின் விளக்குகள் புதிதாக கம்பத்துடன் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.
ரூ.23½ கோடி
திருச்சி-திண்டுக்கல் சாலையில் பொன்னகர் முதல் ராம்ஜிநகர் வரை, காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலை, விமான நிலையம் வயர்லஸ் சாலை, தில்லைநகர் 1 முதல் 11 வரையிலான கிராஸ் சாலைகள், வெங்காய மண்டி சாலை, தில்லைநகர் 80 அடி ரோடு பகுதியில் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்ட எல்.இ.டி. மின் விளக்குகள் ஒளிர செய்து வருகின்றன.
காஜாமலை முதல் கே.கே.நகர் நகர் வரை (மத்திய தானிய கிடங்கு வழியாக) புதிதாக மின் கம்பத்துடன் கூடிய எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக இருளில் மூழ்கி கிடந்த இந்த சாலையும் விரைவில் ஒளி வெள்ளத்தில் மிதக்க போகிறது. மொத்தத்தில் திருச்சி மாநகர பகுதியில் ரூ.23 கோடியே 40 லட்சத்தில் 9 ஆயிரத்து 80 எல்.இ.டி. மின் விளக்குகள் அமைக்கப்படுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.3 கோடியே 27 லட்சம் மதிப்பில் மின்சாரம் சேமிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.