புதுவை அருகே பயங்கரம்: நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது வெடித்து சிதறியது, பிரபல ரவுடி படுகாயம்
புதுவை அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. இதில் பிரபல ரவுடி படுகாயம் அடைந்தார்.
சேதராப்பட்டு,
புதுச்சேரி வில்லியனூர் அருகே நேற்று இரவு 11.30 மணி அளவில் வெடிகுண்டு வெடித்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது தொண்டமாநத்தம் பகுதியில் குண்டு வெடித்ததாக கூறப்பட்டது. உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த தனியார் கம்பெனி தொழிலாளி துத்திப்பட்டு கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானம் அருகே குண்டு வெடித்த சத்தம் கேட்டதாக கூறினார். உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். குண்டு வெடித்ததற்கான தடயம் ஏதாவது உள்ளதா? என்று சோதனை நடத்தினர். அப்போது அதற்கான தடயம் எதுவும் சிக்கவில்லை.
இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் சேதராப்பட்டு போலீசாரும் அங்கு சென்று வில்லியனூர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். மேலும் அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது உத்திரவாகினிபேட் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான ‘பாம்’ ரவி, அவனது கூட்டாளி வழுதாவூர் பகுதியை சேர்ந்த ரவுடி குரால் ஆகியோர் சேர்ந்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு குண்டு வெடித்ததில் பாம் ரவி படுகாயம் அடைந்ததாகவும் தெரியவந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை கொலை செய்யும் நோக்கில் ‘பாம்’ ரவி தனது ஆதரவாளர்களுடன் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. அதனை பார்த்த ஊர் பொதுமக்கள் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளனர். எனவே அந்த வாலிபரை கொலை செய்யும் நோக்கில் ‘பாம்’ ரவி நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே படுகாயம் அடைந்த ‘பாம்’ ரவியை அவரது கூட்டாளிகள் நேற்று நள்ளிரவு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்ததாக உறுதிசெய்யப்படாத தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து சேதராப்பட்டு போலீசார் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு விசாரணை நடத்த சென்றனர். அங்கும் போலீசாருக்கு ரவுடி ‘பாம்’ ரவியை பற்றி உறுதியான தகவல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.