மாநிலத்தின் வருவாயை பெருக்க வேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
திட்டங்களை தடையின்றி செயல்படுத்த மாநிலத்தின் வருவாயை பெருக்க வேண்டும் என்று பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுவை,
புதுவை பட்ஜெட் தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
உப்பனாற்றின் மீது பாலம் கட்ட ரூ.23 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு வேலைகள் நடந்து வந்தன. அதன்பின் பல்வேறு காரணங்களால் அதன் திட்ட மதிப்பீடு ரூ.48 கோடியானது. அதன்பின்னரும் வேலை முடியவில்லை. இப்போது மேலும் ரூ.24 கோடி வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதி காரிகள் கூறுகிறார்கள். கடன்வாங்கி செய்யும் இந்த பணியில் தவறு நடந்துள்ளது. இந்த தவறுகள் தொடர்ந்து நடக்கக்கூடாது. பணிகளை விரைவாக முடிக்கவேண்டும்.
குடிநீர் தேவைக்காக ஊசுட்டேரி, திருக்காஞ்சியில் இருந்து தண்ணீர் எடுக்க திட்டமிடப்பட்டது. அந்த திட்டம் என்னவானது? ஊசுட்டேரி தூர்வாரி 16 வருடம் ஆகிறது. ஆயுஷ்மான் திட்டத்தின்கீழ் ஏழைகள் ரூ.5 லட்சம் வரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். அதுபோன்ற இன்சூரன்சு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இலவச அரிசி திட்டத்தில் தெளிவு இல்லாத நிலை உள்ளது. மஞ்சள் அட்டைக்கு அரிசி வழங்க போகிறீர்களா? இல்லை பணம் வழங்க போகிறீர்களா? ஆட்சிக்கு வந்து 36 மாதத்தில் 11 மாதம்தான் அரிசி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1.30 கோடிதான் கிடைத்துள்ளது. மக்கள் மீது அதிகப்படியான வரிகள் திணிக்கப்பட்டுள்ளது. அவற்றை திரும்பப்பெற வேண்டும். குப்பை வரி, தண்ணீர் வரி, நகராட்சி கடை வாடகை போன்றவை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. அவற்றை திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. பேசினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
கடந்த 3 ஆண்டுகளாக நாம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறோம். சரக்கு மற்றும் சேவை வரியினால் நம்முடைய வருமானம் குறைந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்ட கடனை திருப்பி செலுத்துகிறோம். இந்த சூழ்நிலையில் மாநிலத்தின் வருவாயை பெருக்குவதும் திட்டங்களுக்கான நிதியை திரட்ட வேண்டியதும் நமது தலையாய கடமையாகும்.
புதுவையில் மது கொள்முதல் செய்து விற்பனை செய்ய கார்ப்பரேசன் அமைக்கவேண்டும். சாராயக்கடையை போன்று மதுபான கடைகளையும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொது ஏலத்துக்கு கொண்டுவர வேண்டும். இதில் மட்டுமே நமக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.500 கோடி வருவாய் கிடைக்கும். புதுவை நகரப்பகுதியை தூய்மையாக வைத்திருப்பதுடன் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவேண்டும்.
பாதாள சாக்கடை திட்டம் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இன்றுவரை முடிக்கப்படவில்லை. இத்திட்டத்தை விரிவுபடுத்தி காலக்கெடு நிர்ணயித்து உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். திருக்காஞ்சியில் இருந்து கொண்டுவரப்படும் நீரை சுத்திகரித்து சுகாதாரமான நீரை உப்பளம் தொகுதி மக்களுக்கு வழங்க உரிய ஏற்பாடு செய்யவேண்டும்.
உப்பளம் தொகுதியில் உள்ள 700-க்கும் மேற்பட்ட கூரை வீடுகளை கல்வீடுகளாக மாற்றுவதற்கு வீடுகட்டுவதற்கான மானியம் வழங்க உடனடியாக ஏற்பாடு செய்யவேண்டும். உப்பனாற்றை தூர்வாரி இருபுறமும் சிமெண்டு கரைகள் கட்டி படகு சவாரி தொடங்கி சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.