ஊராட்சி செயலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்
ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகப்பட்டினம்,
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நாகையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில மகளிரணி செயலாளர் கவுசல்யா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சாக்ரடீஸ் முன்னிலை வகித்தார். டெல்டா மண்டல தலைவர் கவிச்செல்வன் வரவேற்றார். மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ், ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சார்லஸ் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்களின் 25 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோர் ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியத்தில் இருந்து மாற்றம் செய்து காலமுறை ஊதியமாக உயர்த்தியதற்கு நன்றி தெரிவிப்பது, ஊராட்சி செயலாளர்களுக்கு மாத ஊதியத்தை கருவூலம் மூலமாக வழங்க வேண்டும்.
ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
அதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஊராட்சி செயலாளர்கள், கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.