தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் பணம், நகைகளை உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்லவேண்டும் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பொதுமக்கள், வியாபாரிகள் நகை, பணத்தை உரிய ஆவணங்களுடன் எடுத்துச்செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2019-07-08 22:45 GMT
வேலூர், 

இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை அரசியல்கட்சியினர் வழங்குவதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பறக்கும்படை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

எனவே வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் அனைவரும் தாங்கள் பயணிக்கும்போது ரூ.50 ஆயிரத்துக்குமேல் எடுத்துச்சென்றால் அதற்கு உண்டான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

வங்கித்துறையினர் ஏ.டி.எம்.களில் பணம் வைக்க செல்லும்போது அதற்குண்டான ஆவணங்களுடன் செல்லவேண்டும். மேலும் தாங்கள் எடுத்துச்செல்லும் தங்கம், வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.10 ஆயிரத்துக்கு மேல் இருப்பின் அதற்குண்டான ஆவணங்களை எடுத்துச்செல்ல வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே நடைபெறும் வாகனசோதனைக்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்