4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2019-07-08 22:30 GMT
செங்கல்பட்டு,

இந்த ஆர்ப்பாட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக்கடன் சங்கங்களில் 10 முதல் 20 ஆண்டுகள் வரை பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பதவி உயர்வு இல்லாமல் ஒரே பதவியில் பணிபுரிந்து வருகின்றனர்.

எனவே, பொதுப்பணி அரசாணையை அமல்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், பொது வினியோக திட்ட பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல் திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் முனிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் தொடக்க கூட்டுறவு வங்கியை சேர்ந்த திரளான பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் இவர்கள் அனைவரும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேரணியாக சென்றார்கள்.

மேலும் செய்திகள்