ஐகோர்ட்டில் 591 பணியிடங்கள்

சென்னை ஐகோர்ட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர், டைப்பிஸ்ட் போன்ற அலுவலக பணியிடங்களுக்கு 591 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Update: 2019-07-08 10:34 GMT
சென்னையில் உள்ள மெட்ராஸ் ஐகோர்ட்டில் அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. ஒரு அறிவிப்பின்படி கம்ப்யூட்டர் ஆபரேட்டர், டைப்பிஸ்ட் போன்ற பணியிடங்களுக்கு 305 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் டைப்பிஸ்ட் (தட்டச்சர்) பணிக்கு மட்டும் 229 இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு 76 இடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினர் 35 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ராணுவ பணியில் உள்ளவர்கள் 45 வயதுஉடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள், கணினி பயிற்சி சான்றிதழ், தட்டச்சு சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

மற்றொரு அறிவிப்பின்படி அசிஸ்டன்ட், எக்ஸாமினர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் போன்ற பணியிடங்களுக்கு 286 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் உதவியாளர் பணிக்கு 119 இடங்களும், எக்ஸாமினர் பணிக்கு 142 இடங்களும் உள்ளன. ஜெராக்ஸ் ஆபரேட்டர் பணிக்கு 7 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு 1-7-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு, ஆங்கில மொழியறிவு மற்றும் வாய்மொழித்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அனைத்துப் பணிகளுக்கும் 31-7-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.mhc.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்