என்.ஐ.டி. கல்லூரிகளில் வேலை
தேசிய தொழில்நுட்ப கல்வி மையங்கள் சுருக்கமாக என்.ஐ.டி. எனப்படுகிறது.
தற்போது பல்வேறு என்.ஐ.டி. கல்வி மைய கிளைகளில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் உள்ள என்.ஐ.டி., ஜலந்தர் என்.ஐ.டி., ஹாமிர்பூர் என்.ஐ.டி. மையங்களுக்கான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகி உள்ளன.
இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்...
கர்நாடகா
கர்நாடக என்.ஐ.டி. கல்வி மையத்தில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜூனியர் என்ஜினீயர், சூப்பிரண்டன்ட், சீனியர் டெக்னீசியன் போன்ற பணிகளுக்கு மொத்தம் 137 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐ.டி.ஐ., பி.இ., பி.டெக். மற்றும் இதர பட்டப்படிப்பு படித்தவர் களுக்கு பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்குமான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏராளமான பணிகள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் recruit.nitk.ac.in என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை படித்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 17-7-2019-ந் தேதியாகும்.
ஜலந்தர்
ஜலந்தர் என்.ஐ.டி. கல்வி மையத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு 44 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மற்றொரு அறிவிப்பின்படி 6 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதுநிலை படிப்புகளுடன் பி.எச்.டி. படித்தவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 12-ந் தேதி கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை http://www.nitj.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
ஹாமிர்பூர்
இமாசல பிரதேச மாநிலம் ஹாமிர்பூரில் உள்ள என்.ஐ.டி. கல்வி மையத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு 42 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதுநிலை படிப்புடன், பி.எச்.டி. நிறைவு செய்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை www.nith.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, வருகிற 12-ந்தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.