இளையான்குடி கண்மாயை மீட்டெடுக்கும் போராட்டம்
இளையான்குடி கண்மாயை மீட்டெடுக்கும் போராட்டத்தில் அனைத்து கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இளையான்குடி,
இளையான்குடி கண்மாய் வறண்ட நிலையில் அந்த பகுதியில் கருவேலமரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடிநீர் வெகுவாக பாதித்து, ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றிபோய்விட்டது. இதுபற்றி அனைத்து கட்சியினர், பொதுமக்கள், விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கருவேல மரங்களை வேரோடு அகற்றக்கோரி வாள்மேல்நடந்த அம்மன் கோவில் திடலில் கண்மாயை மீட்டெடுக்கும் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் இளையான்குடி மற்றும் இடையவலசை, சீத்தூரணி கொங்கம்பட்டி இந்திரா நகர் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் திரளாக போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதில் கண்மாயை மீட்டெடுக்கவும், கருவேலமரங்களை வேரோடு அகற்றவும் இயற்கை வளங்களை பாதுகாத்து நிலத்தடி நீர் மேம்படவும் விவசாயத்தை வளர்த்தெடுக்கவும் அரசு முன்வர வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் கோபி நன்றி கூறினார்.

போராட்டத்தில் ம.ஜ.க. நகர் செயலர் உமர்கத்தாப் தலைமை தாங்கினார். செம்பிறை மருத்துவமனை நிறுவனர் அப்துல் லத்தீப் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சி சிறுபான்மைபிரிவு தலைவர் அம்பலம் ராவுத்தர் நெய்னார் வரவேற்றார். போராட்டத்தில் அ.ம.மு.க.வின் பேரவை மாநில செயலர் மாரியப்பன் கென்னடி, எஸ்.டி.பி.ஐ.யின் மாவட்ட தலைவர் முகம்மது காலிது, அ.ம.மு.க. மாவட்ட சிறுபான்மை செயலர் துருக்கி ரபீக், த.மு.மு.க.வின் மாவட்ட தலைவர் துல்கருணைசேட், ம.ஜ.க.வின் மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது ஆகியோர் கண்டன உரையாற்றினர்.