திருப்பூர் பகுதியில் ரெயில் மோதி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; உடல்களை அடையாளம் காணமுடியாமல் போலீசார் திணறல்
திருப்பூர் பகுதியில் ரெயில் மோதி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் உடல்களை அடையாளம் காணமுடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.;
திருப்பூர்,
திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அவ்வப்போது குற்ற சம்பவங்களும், விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த புகாரின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் ரெயில்வே தண்டவாள பகுதிகளில் கடந்த சில வருடங்களாக ரெயில் மோதி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கவனக்குறைவு காரணமாக தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறப்பவர்கள், தற்கொலை செய்து கொள்பவர்கள், ரெயிலில் இருந்து தவறி விழுபவர்கள் என கடந்த சில வருடங்களில், ரெயில்வே எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பலர் இறந்துள்ளனர். இதில் ஒருசிலரை மட்டுமே போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
அந்த வகையில் 2018-2019-ம் ஆண்டு மே மாதம் வரை பலர் ரெயில் மோதி இறந்துள்ளனர். இதில் பலரை அடையாளம் கண்டுகொண்டாலும், இன்னும் 33 பேர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை. பலரின் உடல் மற்றும் முகம் உள்ளிட்ட உடல் பாகங்கள் சிதைந்து, அடையாளமே தெரியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுவதால் அவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனால் அடையாளம் காணப்படாத உடல்கள் அனைத்தும், அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திலேயே பல மாதங்களாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூருக்குட்பட்ட பகுதியில் வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருவதால் ரெயில் மோதி இறப்பவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்கவும், அவர்களை அடையாளம் காண்பதிலும் போலீசாருக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. உறவினர்கள் யாராவது அவர்களை தேடி வந்தாலோ, அல்லது விளம்பரங்கள் மூலம் அடையாளம் கண்டுகொண்டால் மட்டுமே இறந்தவர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கிறது.
இந்த நிலையில் அடையாளம் காண முடியாமல் இருக்கும் இறந்தவர்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளும் பொருட்டு, அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பணிச்சுமை காரணமாக கூடுதல் போலீசாரை பணிக்கு அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.