உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-07-07 22:45 GMT
திருச்சி,

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூரில் பிஷப் ஹீபர் பள்ளியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பீட்டர் ராஜா தலைமை தாங்கினார்.

இந்த கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள 3 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையில் இருந்து பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் பழைய நிலையே தொடர வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும்.

காலியாக உள்ள முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கணினி வசதி ஏற்படுத்த வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட வேண்டும்.

அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண் டும். அனைத்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் இளங்கோ, பொருளாளர் அன்பரசன், பொதுசெயலாளர் ராஜூ, திருச்சி மாவட்ட தலைவர் பக்கிரிசாமி உள்பட சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்