தஞ்சை மார்க்கெட்டில் தீ விபத்து: ரூ.1 லட்சம் மதிப்பிலான தேங்காய்கள் எரிந்து நாசம்
தஞ்சை மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான தேங்காய்கள் எரிந்து நாசமானது.
தஞ்சாவூர்,
தஞ்சை பீரங்கிமேடு பின்புறம் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் டேவிட்(வயது38). இவர் தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, மருங்குளம் போன்ற பகுதிகளில் மொத்தமாக தேங்காய்களை வாங்கி வந்து விற்பனை செய்வது வழக்கம்.
அதன்படி டேவிட், மருங்குளத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து 6 ஆயிரம் தேங்காய்களை வாங்கி வந்து காமராஜர் மார்க்கெட்டில் திறந்தவெளியில் அரண்மனை சுற்றுச்சுவரை ஒட்டி கொட்டி குவித்து வைத்திருந்தார். இந்த தேங்காய்கள் உரிக்கப்படாதவை. தேங்காய்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகே குப்பைகள் குவிந்து இருந்தன.
நேற்றுமதியம் இந்த குப்பைகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வேகமாக வீசியதால் குப்பைகளில் எரிந்து கொண்டிருந்த தீ அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய்கள் மீது பரவியது. ஏற்கனவே தேங்காய்கள் நன்கு காய்ந்து இருந்ததால் தீ வேகமாக எரிந்தது. இதை பார்த்த வியாபாரிகள் தஞ்சை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் ரூ.1 லட்சம் மதிப்பிலான தேங்காய்கள் எரிந்து நாசமானது.
குப்பைகளில் எப்படி தீப்பிடித்தது? என தெரியவில்லை. குப்பைகள் கொட்டப்பட்டிருந்த இடத்தின் மேல்பகுதியில் மின்கம்பிகள் செல்கின்றன. காற்றினால் மின்கம்பிகள் உரசியதில் ஏற்பட்ட தீப்பொறி விழுந்ததால் குப்பைகளும், தேங்காய்களும் தீப்பிடித்ததா? அல்லது யாராவது சிகரெட்டை புகைத்துவிட்டு அணைக்காமல் வீசி சென்றதால் தீ விபத்து ஏற்பட்டதா? என தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.