தலைவர் பதவியில் ராகுல்காந்தி செயல்பட கோரிக்கை: நெல்லையில் காங்கிரசார் உண்ணாவிரதம்

காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல்காந்தி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லையில் நேற்று மாநகர் மாவட்ட காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2019-07-07 22:30 GMT
நெல்லை,

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததையொட்டி ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவை அவர் வாபஸ் பெற வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் ராகுல்காந்தியை வலியுறுத்தி வந்தனர். பலர் அவருக்கு கடிதங்கள் எழுதினார்கள். இ-மெயில் அனுப்பினார்கள்.

இந்தநிலையில் ராகுல்காந்தி தொடர்ந்து காங்கிரஸ் தலைவராக செயல்பட வேண்டும். ராஜினாமாவை அவர் வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று நெல்லையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்து பேசினார்.

உண்ணாவிரதத்தில் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்