பழனி அரசு மருத்துவமனையில் ரூ.20 லட்சத்தில் 2 டயாலிசிஸ் கருவிகள்; அதிகாரி தகவல்
பழனி அரசு மருத்துவமனையில் ரூ.20 லட்சத்தில் 2 டயாலிசிஸ் கருவிகள் வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்று தலைமை மருத்துவர் விஜயசேகர் தெரிவித்துள்ளார்.
பழனி,
பழனி நகரின் மையப்பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு அவசர சிகிச்சை, பிரசவ வார்டு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, சித்தா உள்பட பல்வேறு பிரிவுகள் உள்ளன. இங்கு பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மட்டுமின்றி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அதன்படி தினசரி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் நோயாளிகளின் சிகிச்சைக்காக புதிய கருவிகளும் வாங்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கூட காது, மூக்கு, தொண்டை சிகிச்சை தொடர்பாக இ.என்.டி. என்ற நவீன மருத்துவ கருவி, மூட்டு தொடர்பாக சிகிச்சை அளிக்க ரூ.20 லட்சத்தில் ஆர்த்தோஸ்கோப் என்ற கருவி வாங்கப்பட்டு, அது மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்மூலம் அறுவை சிகிச்சை இன்றி மேற்கண்டவை தொடர்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு டயாலிசிஸ் கருவியும் இயங்கி வந்தது. ஆனால் பழுது காரணமாக அவை இயக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் பழனி அரசு மருத்துவமனைக்கு ரூ.20 லட்சத்தில் 2 டயாலிசிஸ் கருவி வாங்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதுகுறித்து தலைமை மருத்துவர் விஜயசேகர் கூறியதாவது:- பழனி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுநீரகம் தொடர்பாக சிகிச்சை அளிக்க ரூ.20 லட்சத்தில் 2 டயாலிசிஸ் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.
மேலும் ஏற்கனவே பழுதாகியிருந்த கருவியும் சரிசெய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சீறுநீரக தொடர்பான சிகிச்சைக்கு என தனியாக 2 டாக்டர், 4 நர்சு, டெக்னீசியன் ஒருவர் உள்ளனர். இதன்மூலம் ஒரே நேரத்தில் 3 பேர் சிகிச்சை பெறலாம். தனியார் மருத்துவமனைகளில் ஒரு முறை சிகிச்சை பெற ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை கட்டணமாக வாங்கப்படுகிறது. ஆனால் பழனி அரசு மருத்துவமனையில் அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். எனவே பொதுமக்கள் இதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.