ரெயில் பயணிகளிடம் பணம் வசூலித்த முன்னாள் போலீஸ்காரர் கைது

கோவையில் ரெயில் பயணிகளிடம் பணம் வசூலித்த முன்னாள் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2019-07-06 23:00 GMT
கோவை,

கோவை-கண்ணனூர் பயணிகள் ரெயிலில் பயணிகளிடம், ஒருவர் தன்னை கியூ பிரிவு போலீசார் என்று கூறி, சோதனை என்ற பெயரில் பணம் வசூலிப்பதாக போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கும் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பணப்பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.பிடிபட்டவர் சேலம் ஓமலூரை சேர்ந்த சாமுவேல் (வயது34) என்று தெரிய வந்தது.

இவர் தமிழ்நாடு ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக தேர்வு ஆகி, குற்றச்சாட்டின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்று கூறப்படுகிறது. ரெயில் பயணிகள் மற்றும் ரெயிலில் டீ, காபி, உணவு பொருட்களை விற்பனை செய்ய வருவர்களிடமும் கியூ பிரிவு போலீஸ்காரர் என்று கூறி நீண்டநாளாக பணவசூலில் ஈடுபட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சாமுவேல் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.1,260 பறிமுதல் செய்யப்பட்டது. கைதான அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முன்னாள் போலீஸ் காரர் ஒருவர் பணம் வசூலித்து கை தான சம்பவம் கோவை ரெயில் பயணிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்