ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி நாகையில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நாகை திட்ட தலைவர் சிவராஜன் தலைமை தாங்கினார். திட்ட செயலாளர் கலைச்செல்வன், திட்ட பொருளாளர் செந்தில் குமார், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சீனிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பவர் என்ஜினீயர் அசோசியேசன் மாநில பொதுச்செயலாளர் அருட்செல்வன் கலந்துகொண்டு பேசினார்.
பணி நிரந்தரம்
மின்வாரியத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.380 வழங்கவேண்டும். மின்வாரியத்தில் பணியாற்றும் பகுதி நேர பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அமைப்பின் நிர்வாகிகள் தேவகுமார், இளவரசன், குருமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.