முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த டாக்டர் மீது வழக்குப்பதிவு
முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த டாக்டர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
புதுச்சேரி,
புதுச்சேரி பிள்ளையார்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கபிலன் (வயது 39). டாக்டரான இவர் கடலூர் மற்றும் திருக்கனூர் பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இவரது மனைவி வைக்கமதி (37). இவர்களுக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
வைக்கமதி கடந்த 5 ஆண்டுகளாக காரைக்கால் நிரவி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். இதற்காக குழந்தைகளுடன் அங்கு தங்கியுள்ள அவர் வார இறுதி நாட்களில் மட்டும் புதுவை வந்து செல்வது வழக்கம்.
இதற்கிடையே தம்பதி களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே அவர்கள் விவாகரத்து கேட்டு புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே டாக்டர் கபிலன் விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் பகுதியை சேர்ந்த வனஜா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு கபிலனின் அக்காள் சரஸ்வதி, மாமா விஜயகுமார், வனஜாவின் பெற்றோர் இருசன், அன்பரசி ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த உடன் வைக்கமதி, கபிலனை சந்தித்து நியாயம் கேட்டுள்ளார். அப்போது அவரும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து வைக்கமதியை தி்ட்டி, கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் புதுவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார், டாக்டர் கபிலன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.