கூடலூரில், அதிக பாரம் ஏற்றி வந்த கேரள லாரி பறிமுதல்

கூடலூரில் அதிக பாரம் ஏற்றி வந்த கேரள லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2019-07-05 22:30 GMT
கூடலூர்,

கேரளாவில் இருந்து கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதாக கூடலூர் பகுதி லாரி உரிமையாளர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் அளவுக்கு அதிகமாக எம்.சான்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றி வருவதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து இருந்தனர்.

எனவே உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஆகியோர் உத்தரவின் பேரில் கூடலூரில் போக்குவரத்து போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது கேரள பதிவு எண் கொண்ட லாரி ஒன்று எம்.சான்ட் மணலை அளவுக்கு அதிகமாக ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தது.

இதை நிறுத்தி போலீசார் தணிக்கை செய்தனர். அப்போது எந்த ஆவணங்களும் இன்றி எம்.சான்ட் மணலை ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லாரி ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, உரிய ஆவணங்கள் இன்றி எம்.சான்ட் மணலை அளவுக்கு அதிகமாக ஏற்றி வந்துள்ளதால் ஆர்.டி.ஓ. மூலம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து வாகன தணிக்கை செய்து விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்