மாநகராட்சி ஊழியரை தாக்கிய நவநிர்மாண் சேனாவினர் : குடியிருப்பு வளாகத்துக்குள் மழைநீர் புகுந்ததால் ஆத்திரம்
மும்பை காந்திவிலியில் அண்மையில் பெய்த கனமழையின் போது, அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்துக்குள் அதிகளவில் மழைநீர் புகுந்து விட்டது.
மும்பை,
நவநிர்மாண் சேனா பிரமுகர் ஒருவர் அந்த குடியிருப்பில் வசித்து வந்தார். மாநகராட்சியின் அலட்சியம் காரணமாக குடியிருப்பு கட்டிடத்தில் தண்ணீர் புகுந்து விட்டதாக ஆத்திரம் அடைந்த அவர் தனது கட்சியினருடன் சேர்ந்து மாநகராட்சி ஊழியர் ஒருவரை பிடித்து சரமாரியாக தாக்கியிருக்கிறார். மேலும் அவரை தேங்கி கிடந்த மழைநீருக்குள் தள்ளிவிட்டார்.
மாநகராட்சி ஊழியர் தாக்கப்படும் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மழைநீர் புகுந்ததற்காக மாநகராட்சி ஊழியரை பிடித்து தாக்கிய இந்த சம்பவத்துக்கு கண்டனம் எழுந்து உள்ளது.