பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு அருகே விரைவு பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை அரசுக்கு, பயணிகள் கோரிக்கை
பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு அருகே விரைவு பஸ் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் நகரத்தில் மக்கள் தொகை பெருக்கத்தால், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதே போல் பெரம்பலூர் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கல்வி, வேலை வாய்ப்பு, வியாபாரம், மருத்துவ சிகிச்சை மற்றும் அன்றாட பணிகளுக்காக பெரம்பலூர் வழியாக பஸ்களில் பயணிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு அரசு விரைவு பஸ்கள் உள்பட நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன.
ஏராளமான பயணிகள் மற்றும் பஸ்கள் வந்து செல்லும் நிலையில், புதிய பஸ் நிலையத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக கடும் போக்குவரத்து நெருக்கடி, கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் நிற்க இடமின்றி தவிக்கின்றனர். இதனால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க விரைவு பஸ்களுக்கு என பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு அருகே பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு ஆகும்.
கிடப்பில் போடப்பட்டது
விரைவு பஸ் நிலையம் அமைத்தால் சென்னை முதல் கன்னியாகுமரி மற்றும் கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம், தென்காசி முதல் திருப்பதி வரை, மதுரை முதல் வேலூர் வரை, தென்காசி முதல் சென்னை வரை, கடலூர் முதல் திருச்சி வரை, திருச்சி முதல் திருத்தணி வரை செல்லும் 600-க்கும் மேற்்பட்ட விரைவு பஸ்கள் இந்த பஸ் நிலையத்தில் நின்று செல்லும்.பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக ராஜேஷ் லக்கானி பணிபுரிந்தபோது, பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருப்பது போன்று விரைவு பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த முயற்சி எடுத்தார். ஆனால் சில மாதங்களுக்குள் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
விரைவு பஸ் நிலையம்
விரைவு பஸ் நிலையம் அமைக்கப்பட்டால், பெரம்பலூர் மாவட்ட பயணிகள் மட்டுமின்றி வெளி மாவட்ட பயணிகளுக்கும், பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணித்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு விரைவு பஸ்கள் வந்து செல்வதால் ஏற்படும் பல லட்ச ரூபாய் எரிபொருள் மிச்சமாகும். மேலும் விரைவு பஸ்களில் பயணம் செய்யும் வெளி மாவட்ட பயணிகள் தேவையின்றி 4 கி.மீ. தூரம் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டிய நிலை முற்றிலும் தவிர்க்கப்படும். விரைவு பஸ்களில் குறைந்த பயணிகளுடன் நான்கு வழிச்சாலை வழியே அப்பகுதியில் உள்ள மேம்பாலத்தில் செல்லும் நிலையும் தவிர்க்கப்படும்.
புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் வந்து செல்லும் விரைவு பஸ்களால் ஏற்படும் போக்குவரத்து மற்றும் இடநெருக்கடியும் தவிர்க்கப்படும். விரைவு பஸ் நிலையத்தை அமைக்க, போதுமான இடவசதி நான்கு சாலை சந்திப்பு பகுதியிலேயே உள்ளது. தமிழ்நாடு மின்உற்பத்திக்கழகம் உள்பட அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் நான்கு சாலை பகுதியில் உள்ளன. எனவே அப்பகுதியில் விரைவு பஸ் நிலையம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.