பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.3½ கோடியில் 14 ஏரிகளில் குடிமராமத்து பணி கலெக்டர் சாந்தா தகவல்
பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.3½ கோடியில் 14 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் மேற் கொள்ளப்படுகிறது என்று கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்,
பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக பாசனதாரர்களின் குழுவினருடனான கலந்துரையாடல் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையின் பராமரிப்பில் 14 ஏரிகள் உள்ளன. அந்த ஏரிகளை குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 48 லட்சத்தில் குடிமராமத்து செய்யப்பட உள்ளது. அந்தந்த ஏரிகளின் மூலம் பாசனம் பெறும் பாசனதாரர்களின் குழு அமைத்து, அவர்கள் மூலம் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகள் ஒவ்வொன்றாக தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இத்திட்டம் வருகிற பருவமழை காலத்திற்குள் முடித்திட திட்டமிடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் ஏரிகளின் கரைகளை பலப்படுத்துதல், வரத்து வாய்க்காலை சீரமைத்தல், அணைக்கட்டு பகுதியில் ஷட்டர்கள் பொருத்துதல் மற்றும் பாசன வாய்க்கால் கட்டுமானம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி இத்திட்டம் முழுமையாக முடிவடைந்தபின் சுமார் 2,700 ஏக்கருக்கு பாசனம் மேம்படுத்தப்படுத்தப்படுவதுடன், 14 ஏரிகளின் மூலமாக 260 மில்லியன் கன அடி நீரானது தேக்கப்பட்டு நிலத்தடி நீர் உயர்ந்து எதிர் வரும் காலங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்கிடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் குடிமராமத்து பணிகளின் நோக்கம் மற்றும் பலன்கள் குறித்தும், இத்திட்டத்தை சிறப்பாக செயல் படுத்திட மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்ப வழிமுறைகள் குறித்தும் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்து கூறப்பட்டது. மேலும் பாசனதாரர்களும் இத்திட்டம் சிறப்பாக நடைபெற தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
கூட்டத்தில் அரியலூர் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையின் செயற்பொறியாளர் தட்சணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் (மருதையாறு உபகோட்டம்) பிரபாகரன், பிரிவு அலுவலகப் பொறியாளர்கள், பாசனதாரர் சங்க தலைவர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டனர்.