தென்காசிக்கு நாளை மறுநாள் முதல்-அமைச்சர் வருகை: விழா நடைபெறும் இடத்தை போலீஸ் ஐ.ஜி. ஆய்வு

தென்காசிக்கு நாளை மறுநாள் முதல்-அமைச்சர் வருகையொட்டி, விழா நடைபெறும் இடத்தை போலீஸ் ஐ.ஜி. ஆய்வு செய்தார்.

Update: 2019-07-03 23:30 GMT
தென்காசி,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தென்காசி வருகின்றனர். அவர்கள் பங்கேற்கும் விழா நடைபெறும் இடத்தை போலீஸ் ஜ.ஜி. சண்முகராஜேஸ்வரன் நேற்று ஆய்வு செய்தார்.

முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைகிறார். அவருடன் ஆயிரக்கணக்கானோர் அ.தி.மு.க.வில் இணைகின்றனர். இதற்கான விழா தென்காசி இசக்கி மஹாலில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது.

இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று மாலை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். விழாவிற்காக அமைக்கப்படும் மேடை, தொண்டர்கள் அமரும் இடம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும், அதில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார்.

அவருடன் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன் அபிநபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் ஆகியோரும் ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்