மண்டபம் பகுதியில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
மண்டபம் பகுதியில் தொடர்ந்து 3-வது நாளாக பலத்த காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் 500-க் கும் மேற்பட்ட விசைப் படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் மட்டும் 15,000-க்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர். இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் கடும் சூறாவளி காற்று வீசி வருகிறது. மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பும் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்துறை சார்பில் அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக படகுகள் அனைத்தும் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 15,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.
இதுகுறித்து மண்டபம் மீனவர் சங்க நிர்வாகிகள் காந்தகுமார், பாலசுப்பிரமணியன், ஜாகீர் உசேன் ஆகியோர் கூறியதாவது:- மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 60 நாட்கள் தடைக்காலத்துக்கு பின்பு கடந்த மாதம் கடலுக்கு சென்றனர். அப்போது அனைத்து படகுகளிலும் ஏராளமான இறால் மீன்கள் பிடிபட்டதால் அவற்றுக்கு நல்ல விலை கிடைக்கவில்லை.
மேலும் அதனை கொள் முதல் செய்யும் கம்பெனிகளும் பல்வேறு காரணங்களை கூறி வாங்க மறுத்து விட்டன. இதனால் அதிருப்தியடைந்த மீனவர்கள் இறால் மீனுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுதவிர இலங்கை கடற்படையினரின் தாக்குதல் மற்றும் சிறைபிடிப்பு காரணமாகவும் கடலுக்கு செல்ல தயங்கினர். இந்த நிலையில் தற்போது கடல் கொந்தளிப்பு மற்றும் பலத்த சூறாவளி காற்று போன்றவற்றின் காரணமாக படகுகள் கடலுக்கு செல்ல மீன்துறையினர் தடை விதித்துள்ளனர். தொடர்ந்து 3 நாட்களாக பலத்த காற்று வீசி வருவதால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.