குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 20 மின் மோட்டார்கள் பறிமுதல்
நாகூர் பகுதியில் குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 20 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்,
நாகையில் கடும் வறட்சி காரணமாக ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நாகையில் பல்வேறு இடங்களில் சட்டத்துக்கு புறம்பாக குடிநீர் உறிஞ்சப்படுவதாக நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் நகராட்சி பணியாளர்கள் கடந்த 2 நாட்களாக நாகூர் சிவன் கோவில் மேலவீதி, பெருமாள் வடக்கு வீதி உள்ளிட்ட 1 மற்றும் 2-வது வார்டுகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டத்திற்கு புறம்பாக வீடுகளில் உள்ள குழாய்களில் மின்மோட்டாரை பொருத்தி குடிநீர் உறிஞ்சப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 20 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
நகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகத்துக்குரிய நீராதாரங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் வாகனங்களை கழுவுதல், கால்நடைகளை குளிப்பாட்டுதல், தோட்ட பயன்பாடு ஆகியவற்றுக்கு குடிநீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழாய்களில் மின் மோட்டாரை பொருத்தி குடிநீர் உறிஞ்சுவது கண்டறியப்பட்டால், உடனுக்குடன் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர். பறிமுதல் செய்யப்பட்ட மின் மோட்டார்களை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.