4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வலங்கை மானில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-03 23:00 GMT
வலங்கைமான்,

பெரம்பலூரில் நடந்த வருவாய்த்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் மத்திய அரசின் திட்ட பணிகளுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மீண்டும் பணி அமர்த்துவதை தவிர்க்க வேண்டும்.

டாஸ்மாக் அலுவலக பணியிட துணை கலெக்டருக்கு மறு பதவியிடம் வழங்க வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வலங்கைமான் தாசில்தார் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்ட தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மகேஷ், துணை தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்ட செயலாளர் விக்னேஷ், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் தனபாலன், வட்ட தலைவர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் சங்கத்தின் வட்ட தலைவர் பழனிசாமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்