தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.;

Update:2019-07-04 03:00 IST

தூத்துக்குடி,

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

அனல்மின் நிலையம்

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. இந்த மின் உற்பத்தி எந்திரங்கள் 30 ஆண்டுகளை கடந்து இயங்கி கொண்டு இருக்கிறது.

இதனால் அவ்வப்போது பழுதடைந்து மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.

மின் உற்பத்தி பாதிப்பு

அதன்படி, அனல் மின்நிலையத்தில் உள்ள 2, 5 ஆகிய 2 மின் உற்பத்தி எந்திரங்களிலும் உள்ள கொதிகலன் குழாயில் நேற்று முன்தினம் பழுது ஏற்பட்டது. இதனால் 2 மின் உற்பத்தி எந்திரங்களும் நிறுத்தப்பட்டன.

இதன் காரணமாக 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அனல் மின்நிலைய பணியாளர்கள் பழுது நீக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்