தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் தமிழர்களை சீண்டினால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளமாட்டோம் கவர்னர் கிரண்பெடிக்கு சிவா எம்.எல்.ஏ. எச்சரிக்கை
தமிழர்களை சீண்டி னால் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டோம் என்று கவர்னர் கிரண்பெடிக்கு சிவா எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுத்தார்.;
புதுச்சேரி,
சென்னை மாநகரில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாட் டுக்கு மோசமான நிர்வாகமும், ஊழல் அரசியலும்தான் காரணம் என்றும் மக்கள் சுயநலக்காரர்களாகவும், கோழைகளாகவும் உள்ளனர் என்றும் கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் பதி விட்டிருந்தார்.
கவர்னரின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக சட்டசபையிலும் இந்த பிரச்சினை எழும்பியது. கவர்னர் கிரண்பெடியின் கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து பேசினார். அவரது பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதால் வெளி நடப்பும் செய்தார்.
கவர்னரின் பதிவுக்கு புதுவையிலும் எதிர்ப்பு கிளம்பியது. கவர்னர் தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்று அ.தி.மு.க. வும், கவர்னருக்கு எதிராக கவர்னர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க.வும் அறிவித்தது. அதன்படி புதுவை தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. வின் மேலிட பொறுப்பாளர் சபாபதி மோகன் தலைமை தாங்கினார். தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின்போது சபாபதி மோகன் பேசியதா வது:- நாடாளுமன்ற தேர்தலின் போது கொங்குமண்டல கோட்டை, பா.ம.க. கோட்டை, அ.ம.மு.க. கோட்டை என்று சில கோட்டைகளை கூறினார்கள். அத்தனை கோட்டைகளையும் தகர்த்தெறிந்து மு.க.ஸ்டாலின் தூள்தூளாக்கினார். புதுவை யில் தட்டாஞ்சாவடி தொகுதி யையும் ஒருவரது கோட்டை என்றார்கள். அந்த கோட்டை யையும் தி.மு.க. உடைத்து நொறுக்கியது. அது மட்டு மல்லாது புதுவை மாநிலம் முழுவதையும் கைப்பற்று வோம்.
கவர்னர் கிரண்பெடியே நீங்கள் இந்த கோட்டைக்கு சொந்தக்காரர் அல்ல. பிரதமரால் இங்கு இறக்கி விடப்பட்டவர். நீங்கள் அமைதியாக இருப்பதுதான் வகிக்கும் பதவிக்கும், பெற்ற பட்டத்துக்கும் அழகு. எனவே அதிகமாக ஆடக்கூடாது.
உங்களுக்கு 24 மணிநேரம் அவகாசம் தருகிறோம். தமிழக மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் மன்னிப்பு கேட்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு சபாபதி மோகன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
புதுவை மாநிலத்துக்கு எங்கிருந்தோ வந்தவர் தமிழர் களை கோழைகள், சுயநலம் மிக்கவர்கள் என்று கூறி உள்ளார். தமிழர்களின் வீரம் பற்றி அவருக்கு தெரியுமா? நமது வீரத்தை காட்டினால் அவர் இங்கு இருக்க முடியுமா? நாம் சாதாரணமாக போராடிய போதே அவர் துணை ராணுவத்தை கொண்டு வந்துதான் வெளி யில் சென்றார். இப்போது நாம் ஜனநாயகத்தை காக்க அண்ணா, கருணாநிதி வழியில் நடக்கிறோம். அவரது கருத்து சிலருக்கு உரைக்காமல் இருக்கலாம். அவர்கள் ஆட்சியை காப்பாற்ற கேட்டுக் கொண்டு இருப்பார்கள்.
விடுமுறை நாட்களில் மகாராணி உலா வர முடியாது. உங்களது ஆட்டத்தை சகித்துக்கொண்டு எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் பொறுத்துக்கொள்கிறோம். ஜனநாயகத்துக்கு விரோதமாக நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தீர்கள். ஆட்சி மாற்றம் வரை முயற்சித்தீர்கள். அதை அனைத்தையும் பொறுத் துக்கொண்டோம்.
ஆனால் தமிழர்களை சீண்டினால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். பொங்கி எழுவோம். அப்படி செய்தால் உங்களால் இந்த ஊரில் இருக்க முடியாது. தமிழர்களை சீண்டினால் என்ன நடக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள். தமிழர்களுக்கு இழுக்கு என்றால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுப்பார். தமிழக, புதுவை எம்.பி.க்கள் குரல் எழுப்புவார்கள். பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் வந்தவர்கள் எப்ப டிப்பட்ட போராட்டத்திலும் ஈடுபடுவோம். இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, பொருளாளர்கள் சண். குமாரவேல், செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், தொகுதி செயலாளர்கள் சக்தி வேல், கலியகார்த்திகேயன், நடராஜன், இளைஞர் அணி அமைப்பாளர் முகமது யூனுஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விசுவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் முருகன், ராஷ்ட்டிரிய ஜனதா தள தலைவர் சஞ்சீவி, திராவிடர் கழக தலைவர் சிவவீரமணி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பஷீர் அகமது, படைப்பாளி மக்கள் கட்சி தலைவர் தங்கம், மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.