ரூ.46 லட்சம் கொள்ளை வழக்கில் கைதான சிறை வார்டன் பணி இடைநீக்கம்

ரூ.46 லட்சம் கொள்ளை வழக்கில் கைதான சிறை வார்டன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2019-07-02 21:30 GMT
சேலம்,

ரூ.46 லட்சம் கொள்ளை வழக்கில் கைதானசேலம்சிறை வார்டனை பணி இடைநீக்கம் செய்து மத்திய சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன் உத்தரவிட்டார்.

தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த மே மாதம் ரூ.46 லட்சம் கொள்ளை போனது. இதுதொடர்பாக பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை விரைவில் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளையில் சேலம் மத்திய சிறையில் வார்டனராக பணிபுரிந்த தர்மபுரி மாவட்டம் சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்த பெருமாள்(வயது 27), தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த செந்தில், கார் டிரைவர் இளவரசன் உள்பட சிலருக்கு தொடர்புடையது தெரியவந்தது.

இதையடுத்து பெருமாள், பிரசாந்த், செந்தில், இளவரசன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே கொள்ளை வழக்கில் கைதான பெருமாள் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில் அவரை பணி இடைநீக்கம் செய்து சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன் உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்