நாமக்கல், எலச்சிபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், எலச்சிபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
நாமக்கல்,
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்கிட வேண்டும். தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் குழந்தான் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தம்பிராஜா வரவேற்று பேசினார். இதில் ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் முருகராஜ், தனசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
குடிநீர் தட்டுபாட்டை சரிசெய்யாத மாநில அரசை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் அன்புமணி தலைமை தாங்கினார். மாநில கட்டுபாட்டுக்குழு நிர்வாகி மணிவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
இதில் எலச்சிபாளையத்தில் பொதுக்கழிப்பிடம், குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். எலச்சிபாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும். மேட்டூர் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தி சம்பளத்தை ரூ.230 ஆக உயர்த்த வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள கிராமப்புற வீடில்லாத ஏழைகளுக்கு 3 சென்ட் நிலம் ஒதுக்கி தர வேண்டும். பெரியமணலி - கோட்டபாளையம் செல்லும் சாலையில் உள்ள அத்திகாட்டில் மின்விளக்கு வசதி செய்துதர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.