பவாய் ஏரி நிரம்பியது
மும்பையில் உள்ள தொழிற்சாலைகள், ஓட்டல், நீச்சல் குளங்கள் போன்றவற்றிற்கு பவாய் ஏரியில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.;
மும்பை,
கடந்த 2 மாதங்களாக அடித்த வெயிலால் பவாய் ஏரியின் நீர் மட்டம் குறைந்து காணப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பவாய் பகுதியில் சுமார் 400 மி.மீ. மழை பதிவானது. இதையடுத்து ஏரிக்கு தண் ணீர் வரத்து அதிகரித்தது.
இந்தநிலையில் நேற்று பவாய் ஏரி நிரம்பியது. ஏரியில் இருந்து தற்போது உபரி நீர் வெளியேறி வருகிறது.