ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக ஏரியில் இறங்கி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக ஏரியில் இறங்கி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளப்பெரம்பூர்,
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும், நீர் பங்கீடு ஒழுங்காற்று குழுவுக்கும் முழுநேர தலைவர்களையும், அலுவலர்களையும் நியமிக்க வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்துக்கு தேவையான காவிரி நீரை கர்நாடக மாநிலத்திடம் இருந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூரில் உள்ள ஏரியில் இறங்கி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளப்பெரம்பூர் 1-ம் மற்றும் 2-ம் சேத்தி, குணமங்களம், ராயந்தூர், சக்கரசாமந்தம், தென்னங்குடி, சித்திரக்குடி, வடகால், சீராளூர், சித்தாயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக ஏரியில் இறங்கி கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள சானூரப்பட்டி கடைவீதியில் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தையொட்டி சானூரப்பட்டி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.