சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
நெல்லை,
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
பாலியல் தொல்லைநெல்லையை அடுத்த ராமையன்பட்டி கோபாலபுரத்தை சேர்ந்தவர் திவான்மைதீன் (வயது 48), கூலி தொழிலாளி. கடந்த 2017–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29–ந் தேதி அதே தெருவில் 13 வயது மாற்றுத்திறனாளி சிறுமி விளையாடிக் கொண்டு இருந்தாள்.
அப்போது திவான்மைதீன், அந்த சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். அந்த சிறுமி நடந்த விஷயத்தை தன்னுடைய தாயாரிடம் கூறினாள். உடனே சிறுமியின் தாயார், நெல்லை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி, திவான்மைதீனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
5 ஆண்டு சிறைஇதுதொடர்பான வழக்கு நெல்லை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி இந்திராணி விசாரித்து, திவான்மைதீனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பால்கனி ஆஜராகி வாதாடினார்.