பட்டா நிலத்தை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குடியேறி போராட்டம்
தமிழக அரசால் வழங்கப்பட்ட பட்டா நிலத்தை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது குண்டடம் அருகே உள்ள புள்ளிகாளிபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நிழலியை அடுத்த புள்ளிகாளிபாளையம் பகுதியில் வசிக்கின்றோம். இந்நிலையில் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களின் நிலங்களை இன்றுவரை அளந்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி கொண்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக பல முறை மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் அந்த பகுதியில் குடிசை வீடு கட்டினால், அங்குள்ள நபர்கள் எங்களை விரட்டி அடிக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தின் உரிமையாளர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் சுப்பிரமணி என்பவர், அந்த நிலத்தை சுற்றி கம்பிவேலி அமைத்துள்ளார். மேலும், அந்த இடத்தை விற்பனை செய்ய முயற்சி செய்து வருகிறார். எனவே தமிழக அரசால் வழங்கப்பட்ட பட்டா நிலத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர். முன்னதாக புள்ளிகாளிபாளையம் பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அங்கு சமையல் செய்து சாப்பிட தேவையான அரிசி மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்திருந்தனர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
தளி ஜல்லிபட்டி வெங்கிட்டாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்களது கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. அப்போது இந்த கிராமத்தின் மக்கள் தொகை 500 பேர் மட்டுமே. ஆனால் தற்போது 1500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். எனவே முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் கொள்ளளவு மிகவும் குறைவு. நாங்கள் பலமுறை விண்ணப்பித்தும் குடிநீர் அதிகரிப்புக்கு எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் தற்போது குடிநீர் பற்றாக்குறை நிலவி கொண்டிருக்கிறது. எனவே மேலும் ஒரு குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டித்தர வேண்டும். தொடர்ந்து காலையில் ஒரு தொட்டியும், மாலையில் ஒரு தொட்டியும் என நீரேற்றி சீராக தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
காங்கேயம் வட்டம் வீரணம்பாளையம் சாம்பவலசு திருசெந்தில்நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களது ஊர் அருகே உள்ள வீட்டுமனை இடத்தில் சுமார் 2 ஏக்கருக்கு மேல் பிரித்து ஒவ்வொரு இடத்திற்கும் மனை பிரிவு இடங்களாக பிரித்து ஒவ்வொரு இடத்திற்கும் மனை பிரிவு எண் போட்டு எங்களுக்கு காலி மனை இடங்களாக சேது பாலசுப்பிரமணியம் என்பவர் விற்பனை செய்தார்.
தற்போது எங்களது இடத்தில் சட்டவிரோதமாக கிணறு தோண்டி தண்ணீர் எடுத்து விற்பனை செய்துள்ளனர். இதனை தட்டிக்கேட்டால் எங்களிடம் தகராறு செய்கிறார். எனவே சட்டவிரோதமாக கிணறு தோண்டி தண்ணீர் விற்பனை செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
மடத்துக்குளம் கணேச புரம் 13-வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் குடியிருக்க வீட்டுமனை இடம் வேண்டி கடந்த 30 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் அனைவரும் கூலித்தொழில் செய்து வருகிறோம். எனவே எங்களுக்கு வீடு கட்ட இடம் வீட்டுமனை பட்டாவுடன் வழங்க வேண்டும். மேலும், அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
இதுபோல் காங்கேயம் நத்தக்காட்டுப்புதூர் மற்றும் தாராபுரம் கோனாபுரம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் “ எங்களது பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள். எனவே எங்களுக்கு வீடு கட்ட இடம் வீட்டுமனை பட்டாவுடன் வழங்க வேண்டும். எங்களால் வாடகையும் கொடுத்து, வாழ்க்கையை நடத்த முடியவில்லை. எனவே இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றிருந்தனர்.