ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முன்பு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போராட்டம்
மனைப்பட்டா வழங்கக்கோரி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முன்பு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் தலைமையில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
புதுவை முத்தியால்பேட்டை தொகுதி மதுரை வீரன்தோப்பு பகுதியில் 47 குடு்ம்பங்கள் பல வருடங்களாக வசித்து வருகின்றன. அவர்கள் தங்களுக்கு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி வருகின்றனர்.
நேற்று அவர்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான வையாபுரி மணிகண்டனுடன் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்துக்கு வந்தனர். அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து அவர்கள் இலவச மனைப்பட்டா வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அலுவலகத்திலிருந்த இயக்குனர் ரகுநாதன் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மனைப்பட்டா பிரச்சினைக்கு இன்னும் 20 நாட்களில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார்.
அவரது உறுதிமொழியை ஏற்று வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ்பெற்று கலைந்து சென்றனர்.