அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.;

Update: 2019-07-01 22:45 GMT
அரியலூர்,

அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனருமான சரவணவேல்ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் வளர்ச்சித்திட்ட பணிகளுக்காக ரூ.15 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 704 நீர் ஆதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டதால், குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டது. தற்போது 72 ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகளும், புதிய குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வழங்க 20 திட்ட பணிகளும், 12 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கான பணிகளும் என மொத்தம் 104 திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சித் துறை) சுந்தர்ராஜன், கோட்டாட்சியர்கள் சத்தியநாராயணன் (அரியலூர்), ஜோதி (உடையார்பாளையம்), தாசில்தார்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்