மாவட்ட புதிய கலெக்டராக ராமன் பதவி ஏற்பு

சேலம் மாவட்ட புதிய கலெக்டராக ராமன் பதவி ஏற்றார்.

Update: 2019-07-01 23:30 GMT
சேலம், 

சேலம் மாவட்ட கலெக்டராக இருந்த ரோகிணி மாற்றப்பட்டு புதிய கலெக்டராக சி.அ.ராமன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து சேலம் மாவட்டத்தின் 172-வது கலெக்டராக சி.அ.ராமன் நேற்று பதவியேற்று கொண்டார். அவருக்கு அனைத்து அரசு துறை உயர் அதிகாரிகள், கலெக்டர் அலுவலக அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பொதுமக்களும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

புதிய கலெக்டர் சி.அ.ராமனின் சொந்த ஊர் நெல்லை பாளையங்கோட்டை ஆகும். பி.எஸ்சி. (அக்ரிகல்சர்), எம்.பி.ஏ. படித்துள்ள இவர் 2002-ம் ஆண்டு மதுரை துணை கலெக்டராக பயிற்சி பெற்று 2008-ம் ஆண்டு வருவாய் கோட்ட அலுவலராக முசிறியில் தனது பணியை தொடங்கினார்.

மன்னார்குடி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் வருவாய் கோட்ட அலுவலராகவும், சுனாமி நில எடுப்பு தனித்துணை கலெக்டராகவும் பணிபுரிந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று திருச்சி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் வருவாய் அலுவலராகவும், ஆவின் இணை மேலாண் இயக்குனராகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பொது மேலாளராகவும், முதல்-அமைச்சர் அலுவலக அரசு துணை செயலாளராகவும் பணியாற்றினார்.

இதைத்தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து கிடைத்ததை தொடர்ந்து சென்னை நில நிர்வாக இணை ஆணையாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி முதல் 2019-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி வரை வேலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்