பரமத்திவேலூரில் விவசாய நிலத்தில் விஷம்கலந்த தானியத்தை தின்ற மயில்கள் உயிருக்கு போராட்டம்

பரமத்திவேலூரில் உள்ள விவசாய நிலத்தில் விஷம் கலந்த தானியங்களை தின்று உயிருக்கு போராடிய 2 பெண் மயில்களை வனத்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.;

Update: 2019-07-01 22:15 GMT
பரமத்தி வேலூர்,

பரமத்திவேலூர், கபிலர்மலை, ஜேடர்பாளையம், பாண்டமங்கலம், அனிச்சம்பாளையம், பாலப்பட்டி, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக மயில்கள் அதிகஅளவில் காணப்படுகின்றன. மயில்கள் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு இரை தேடி செல்கின்றன.

இந்த நிலையில் பரமத்திவேலூர் பாவடித்தெரு பகவதி அம்மன் கோவில் அருகில் உள்ள தோட்டத்தில் விஷம் கலந்த தானியங்களை தின்ற 2 பெண் மயில்கள் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தன. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர்.

இதுகுறித்து நாமக்கல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த நாமக்கல் வனத்துறை அலுவலர்கள் தமிழ்வேந்தன், தனபால், முரளி மற்றும் பரமத்தி வேலூர் வனக்காவலர் நாகராஜ் ஆகியோர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பெண் மயில்களை மீட்டு நாமக்கல் அரசு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

மேலும் விவசாய நிலத்தில் விஷம் கலந்த தானியங்களை வீசியவர்கள் யார்? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்