உலக மருத்துவர் தினம்: சிறப்பாக சேவையாற்றிய டாக்டர்களுக்கு விருது கவர்னர் வழங்கினார்

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் உலக மருத்துவ தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி சிறப்பான சேவையாற்றிய டாக்டர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

Update: 2019-07-01 22:45 GMT
சென்னை,

விழாவில் பன்வாரிலால் புரோகித் பேசும்போது, “இயற்கைக்கு மாறான வாழ்க்கை முறைகளால் தற்போது எண்ணற்ற நோய்கள் வரத்தொடங்கிவிட்டன. பிளாஸ்டிக், பெட்ரோல் மற்றும் ரசாயன பயன்பாடுகளால் முந்தைய நூற்றாண்டுகளில் இருந்ததை விடவும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டன. யோகா, தியானம், சத்தான உணவு போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் நோய்களை கணிசமாக குறைக்கமுடியும். மருத்துவ தொழில் என்பது புனிதமானது”, என்றார்.

விழாவில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் கே.செந்தில், துணைத் தலைவர் டாக்டர் ஆர்.வி.எஸ்.சுரேந்திரன், உறுப்பினர் டாக்டர் எம்.கே.பொன்னுராஜ், விருதுகள் குழு தலைவர் டாக்டர் டி.மருதுபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்