பக்தர்கள் வழிபாடு செய்யும் வகையில் வண்டாம்பாளை மாரியம்மன் கோவிலை திறந்துவிட வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை மனு
வண்டாம்பாளை மாரியம்மன் கோவிலை திறந்து பக்தர்கள் வழிபாடு செய்திட நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் வண்டாம்பாளை கிராம மக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
சீல் வைப்பு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் வண்டாம்பாளை கிராமத்தில் மகா சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவின்போது சாமி ஊர்வலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திருவாரூர் உதவி கலெக்டரால்் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி அன்று கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இன்று வரை கோவில் திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள், பக்தர்கள் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
திறந்து விட வேண்டும்
கோவில் திறக்காமல் இருப்பதால்் பக்தர்கள், மருளாளிகள், குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் என அனைவரும் இன்று வரை கோவில் வாசலிலேயே பாலாபிஷேகம் செய்வது, அர்ச்சனை செய்வது, மொட்டையடிப்பது, காது குத்துதல், திருமணம் செய்வது போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் வாசலிலேயே மிகுந்த மன வேதனையுடன் செய்து வருகின்றனர்.
எனவே மகா சக்தி மாரியம்மன் கோவிலை திறந்து பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.