ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்

ஈரோட்டில் ராணுவ வீரர்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது.

Update: 2019-07-01 10:27 GMT
சென்னை ராணுவ ஆள்சேர்க்கும் தலைமைச் செயலகம், கோவையில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தின் வழியாக, ராணுவ வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு முகாமை நடத்த அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் ஆகஸ்டு மாத கடைசி வாரத்தில் இந்த ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, சேலம் ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

சோல்ஜர் டெக்னிக்கல், (Soldier Technical), சோல்ஜர் அம்யூனிசன்ஸ்/ஏவியேசன் (Soldier Technical-amn/av), சோல்ஜர் நர்சிங் அசிஸ்டன்ட் (Soldier Nursing Assistant), சோல்ஜர் ஜெனரல் டியூட்டி (Soldier General Duty), சோல்ஜர் கிளார்க்/ ஸ்டோர் கீப்பர் (Soldier Clerk/Store Keeper Technical), சோல்ஜர் டிரேட்ஸ்மேன் (Soldier Tradesman) போன்ற பிரிவுகளில் தகுதியான இளைஞர்கள் பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள்.

நேரடி நேர்காணல் மூலம் இந்த பணிகளுக்கான ஆட்சேர்க்கை நடக்க இருக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் இணையதளத்தில் வெளியிடப்படும் அனுமதிச்சீட்டுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். அப்போது தேவையான ஆவணங்களை உடன் எடுத்து வர வேண்டும். அனுமதிச் சீட்டில் நேர்காணல் நாள் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

நேர்காணல் ஆகஸ்டு 22-ந் தேதி முதல் செப்டம்பர் 2-ந் தேதி வரை ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான அனுமதிச்சீட்டு ஆகஸ்ட்டு 9-ந் தேதி முதல் பெறலாம்.

ஆவண பரிசோதனை, உடல்தகுதித் தேர்வு, உடல் அளவீடுகளுக்கான தேர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுகிறார்கள். இறுதியாக மருத்துவ பரிசோதனையும் நடைபெறும்.

8,10,12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்கலாம். விண்ணப்பதாரர்கள் 17½ வயது முதல் 23 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 8-ந் தேதி விண்ணப்பப்பதிவு தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசிநாள் ஆகஸ்டு 7-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்