கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஸ்ரீஅபிநவ் பொறுப்பேற்பு

கடலூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஸ்ரீஅபிநவ் பொறுப்பேற்றார்.

Update: 2019-06-30 22:30 GMT
கடலூர்,

கடலூர் மாவட்ட போலீ்ஸ் சூப்பிரண்டாக சரவணன் பதவி வகித்து வந்தார். இவர் திடீரென மாநில உளவு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து கடலூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சென்னை கிழக்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையர் ஸ்ரீஅபிநவ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் கடலூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றார்.

அவருக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து புதிய போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் நிருபர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எந்த நேரத்திலும் என்னிடம் புகார் தெரிவிக்கலாம். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம்-ஒழுங்கு பேணி காக்கப்படும். போலீசாரின் நலன் காக்கப்படும் என்றார். புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீஅபிநவ் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரி ஆனார். அதன்பிறகு கடந்த 2016-18-ம் ஆண்டு வரை கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். தொடர்ந்து சென்னை கிழக்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்